பட்டியலின ஊராட்சி தலைவர்களை பணி செய்ய விடாமல் தடுப்போர், அவமதிப்போர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஆக.31) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக வடமாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.