தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை
திருவண்ணாமலை, ஜூன் 9- திருவண்ணாமலை மாவட்டம் புதுப் பாளையம் ஒன்றியத்தில் உள்ள கல்லரப் பாடி ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரை கடந்த ஒன்றரை ஆண்டு களாக வாக்களித்த மக்களுக்கு எந்தப் பணியும் செய்யவிடாமல் இடையூறாக ஊராட்சி செயலாளர் வேல்முருகன் என் பவர் இருந்துள்ளார். மேலும் தங்கள் வீட்டில் மாடு மேய்த்தவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவரின் இருக் கையில் அமர விடாமல் தனியாக பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைத்து அவமானப்படுத்தி வந்துள்ளார். மேலும் ஊராட்சிமன்ற அலுவல கத்தை திறக்ககாமல் பூட்டியே வைத்தி ருந்துள்ளார். ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தேவைப்படும் கையொப் பத்தை பெற மட்டும் ஏழுமலையை அலுவலகத்திற்கு வரவழைத்து கையொப்பம் பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்.
மேலும் அவரை ஒருமையில் பேசுவதும், அவருடைய பணிகளை செயலாளரே செய்து வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஆதாரங்களு டன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அந்த ஊராட்சிக்கு விசார ணைக்காக வந்த மாவட்ட திட்ட இயக்கு னர் ஒருதலைபட்சமாக விசாரணை செய்தும் இருவரும் சமரசமாக செல் லும்படியும் கூறிவிட்டு, ஊராட்சி மன்றத் தலைவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மன வேதனையை உருவாகியுள்ள தாகவும், தன்னை நம்பி வாக்களித்த கிராம மக்களுக்கு தேவையான பணி களை செய்ய விடாமல் இடையூறு செய்து வரும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஏழுமலை பூட்டிய ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுவும் அளித்தார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 9) கல்லரைபாடி தலித் ஊராட்சி மன்ற தலை வரை சந்தித்தபின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை செய லாளர் ப.செல்வன் செய்தியாளர்களி டம் கூறுகையில், ஊராட்சிமன்றத் தலை வர் ஏழுமலை மீது, ஊராட்சி செயலாள ரும், துணை தலைவரும் சாதிய வன் மத்துடன் நடந்து கொண்டுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆசனத்தில் அமரவிடாமலும், அவரை பணி செய்ய விடாமலும் தடுத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அர சுக்கும் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தலித் ஊராட்சிமன்ற தலைவர் சுதந்திரமாக செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது, திருவண்ணாமலை மாவட்டம் செங் கம் வட்டம் கல்லரைப்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை மீது வன்கொடுமையுடன், ஊராட்சி செயலாளர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் அந்த கிரா மத்திற்கு நேரடியாகச் சென்று ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தனக்கு ஏற்பட்டுள்ள சாதிய ரீதியான தாக்குதல்கள் குறித்து தெரிவித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.வீரபத்திரன், பி.செல்வன், எஸ்.ராமதாஸ், எம்.பிரகலாதன், வழக் கறிஞர் எஸ்.அபிராமன், நிர்வாகிகள் காமராஜ், சிஎம்,பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லரைபாடி கிராமத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர மாக செயல்பட முடியாத நிலை உள்ளது, கடந்த 25 மாத காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள் ளார். சாதிய ரீதியாக அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலா ளர் செயல்பட்டுள்ளனர்.
தற்போது ஊராட்சிமன்ற தலை வரின் புகாரையடுத்து சாதிய ரீதியாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் கூட, ஊராட்சிமன்றத் தலைவர் மிகுந்த அச்சத்தில் உள்ளார். அவருடைய அச்சத்தை போக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நேரில் தலையிட்டு ஊராட்சி மன்ற தலைவ ருக்கு உரிய இருக்கையில் தலித் ஊராட்சி மன்றத் தலைவரை அமர வைத்து, அவரை சுதந்திரமாக பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதி ராக செயல்பட்டவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.