திருநெல்வேலி, செப். 17- தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாளை யங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாலை அணி வித்தது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பி னர் பூ.கோபாலன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட துணை தலைவர் ஆர்எஸ்.துரைராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் டவுன் துரை. நாராயணன், பிஎஸ்என்எல் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டுதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தூத்துக் குடியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் புவிராஜ், தலைவர் காசி, டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் முத்து,எஸ்எப்ஐ மாவட்ட தலைவர் கார்த்திக், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன்,ஏ.எம்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக் குடி மாவட்ட காவல்துறை அலுவல கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நாகர்கோவில் சிபிஎம் பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்.17 அன்று நாகர்கோவிலில் உள்ள பெரியார் சிலைக்கு சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், நாகர் கோவில் மாநகரக்குழு செயலாளர் கே.மோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம்
தந்தை பெரியார் பிறந்த நாள் அரசு சார்பில் சமூக நீதி நாளாக கொண் டாட படுமென தமிழக முதல்வர் அறி வித்தற்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுக அலுவலகத் ்தில் வெள்ளியன்று மாவட்டஆட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் ஏற்று கொண்டனர்.