கும்பகோணம் ஜூலை 18- தொழிலாளர்கள், மக்கள் பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மாநிலங்க ளவை தி.மு.க. உறுப்பினர் சண்முகம் தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை திமுக உறுப்பினர் சண்முகம், கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை, மகாமகக் குளம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம், தொமுச பொதுச்செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் செழியன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், நகர செயலாளர் சுப.தமிழழ கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள தொ.மு.ச. அலு வலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், தமிழகம் மட்டு மல்லாமல் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பிரச்சினை, மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் குரல் எழுப்புவோம். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வர வேண் டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்துவோம். இனியும் கால தாம தம் படுத்தினால், வேலூர் நாடாளு மன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் செய்வதற்கான நடவ டிக்கையில் ஈடுபடுவோம். காவிரி நீர்ப் பிரச்சனை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாநி லங்களவையில் குரல் எழுப்புவோம் என சண்முகம் தெரிவித்தார்.