பவன் கல்யாணால் ஜேஇஇ தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த மாணவர்கள்
பவன் கல்யாணால் ஜேஇஇ தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக உள்ள ஜனசேனா தலைவரும், நடிக ருமான பவன் கல்யாண் திங்களன்று விசாகப்பட்டினத்திற்கு சென்றார். பெண்டுர்த்தி பகுதியில் பவன் கல்யா ணின் கான்வாய் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அயன் டிஜிட்டல் தேர்வு மையத்தில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுத இருந்த 20க்கும் மேற்பட்ட மாண வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல், தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். துணை முதல மைச்சர் பவன் கல்யாணால் ஜேஇஇ தேர்வு எழுதும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட வாருங்கள்
பாஜகவிற்கு டி.கே.சிவகுமார் அழைப்பு கர்நாடக மாநிலத்தில் விலை வாசி உயர்வுக்கு எதிராகப் போ ராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக வும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அம்மாநில துணை முதல மைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள காணொலியில்,”பாஜக தோழர்கள் கர்நாடகத்தில் “ஜன ஆக்ரோஷ யாத்திரை” போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கி றேன். ஆனாலும் இந்திய அரசு, அதா வது உங்கள் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தி யுள்ளது. உங்களின் இந்தப் போராட்டம் உங்கள் கட்சிக்கு எதிராக முன்னெ டுக்கப்பட வேண்டும்.பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத் தால் உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என கூறியுள்ளார்.