மக்களவை காங். துணை தலைவர் கோகோய்
அசாம் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது. அசாம் இப்போது ஒரு காவல்துறை ஆதிக்கம் உள்ள மாநிலமாக மாறிவிட்டது. மிரட்டல்கள் மற்றும் நீதி தவறுவது அம்மாநிலத்தில் வழக்கமாகவே மாறிவிட்டது.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க விரும்புகிறார். ஆனால் மோடி அரசு அமெரிக்காவிற்கு மேலும் அதிக பொருட்களை ஏற்றுமதி செய்ய முயற்சிக்கின்றது. இந்த இரண்டும் ஒரே நேரத்தில் எப்படி நடக்கும்?
பத்திரிகையாளர் ராணா அயூப்
மோடியை டீ விற்பவர் என்று மணிசங்கர் சொன்ன போது இந்த நாடே கொதித்தது. ஆனால், நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் முஸ்லிம் இளைஞர்களை பஞ்சர் ஓட்டுபவர்கள் என்று கூறும்போது எந்த கோபமும் வரவில்லை. அது தலைப்புச் செய்தியாகவில்லை. உயர் பதவியில் உள்ளவர்களிடம் இருந்து வரும் மதவெறி என்பது இன்னும் மதவெறியாகவே இருக்கிறது. இந்த மௌனம் அந்த மதவெறிக்கு உடந்தையாக இருக்கிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது முற்றிலும் அர சியல் பழிவாங்கல் நோக்கம் தான்.சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எதிர்க்கட்சி களின் வலுவான குரலாக இருப்பதால்தான் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.