தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.920 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (09-05-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.115 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.59,480-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,435-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.