சென்னை,மே.23- நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஆயிரக்கணக்கில் அதிகரித்த நிலையில் தற்போது வெறும் ரூ.280 மட்டுமே குறைந்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நேற்று ரூ.112க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.111க்கு விற்பனையாகிறது.