இனி அமைதியின் பெரும் கொடி பறக்கும், தோழர்களே!
மாஸ்கோவில் இருந்து மே 9, 1945 அன்று இரவு 8 மணி (மாஸ்கோ நேரம்) ஒலிபரப்பப்பட்டது
தோழர்களே! நாட்டு மக்களே! ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் மகத்தான நாள் வந்துவிட்டது. செஞ்சேனையாலும் நமது நேசநாடுகளின் படைகளாலும் மண்டியிட வைக்கப்பட்ட பாசிச ஜெர்மனி, தான் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டு, நிபந்தனையற்ற சரணாகதியை அறிவித்துள்ளது. மே 7 அன்று ரெய்ம்ஸ் நகரில் சரணாகதி தொடர்பான ஒப்புதல் கையெழுத்திடப் பட்டது. மே 8 அன்று ஜெர்மனி தலை மையிலான நேசநாடுகளின் படைகளின் தலைமை மற்றும் சோவியத் படைகளின் தலைமை ஆகியோரின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஜெர்மன் உயர் ராணுவத் தளபதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் பெர்லினில் சரணாகதியின் இறுதிச் செயல்முறையில் கையெழுத்திட்டனர். இதன் செயல்பாடு மே 8 அன்று இரவு 24.00 மணிக்கு தொடங்கியது. ஜெர்மானிய தலைவர்களின் ஓநாய்த் தனமான பழக்கவழக்கங்களை நாம் அறிந்திருப்பதால், உடன்படிக்கைகளை யும் ஒப்பந்தங்களையும் வெறும் காகிதத் துண்டுகளாகக் கருதும் அவர்களின் வார்த்தைகளை நம்புவதற்கு எந்த காரண மும் இல்லை. இருப்பினும், இன்று காலை சரணாகதி செயல்முறைக்கு ஏற்ப, ஜெர்மன் படைகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு பெருமளவில் நமது படைக ளிடம் சரணடையத் தொடங்கின. இது இப்போது வெறும் காகிதத் துண்டு அல்ல. இது ஜெர்மனியின் ஆயுதப் படைகளின் உண்மையான சரணாகதி. உண்மையில், செக்கோஸ்லோவாகியா பகுதியில் உள்ள ஒரு ஜெர்மானிய படைக்குழு இன்னும் சரணடைவதை தவிர்க்கிறது. ஆனால் செஞ்சேனை அதை உணரச் செய்ய முடியும் என நம்புகிறேன். இப்போது நாம் முழு நியாயத்துடன் கூற முடியும், ஜெர்மனியின் இறுதித் தோல்வி யின் வரலாற்று நாள், ஜெர்மானிய ஏகாதி பத்தியத்தின் மீதான நமது மக்களின் பெரும் வெற்றியின் நாள் வந்துவிட்டது. நமது தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையின் பெயரால் நாம் செய்த மகத்தான தியாகங்கள், போரின் போது நமது மக்கள் அனுபவித்த கணக்கி லடங்காத இன்னல்கள் மற்றும் துன்பங் கள், தாய்நாட்டின் பலிபீடத்தில் வைக்கப் பட்ட போர் முனைகளின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நின்ற செஞ்சேனை வீரர்கள் செய்த தீவிர வேலைகள் ஆகியவை வீணாகவில்லை; மாறாக பகைவனுக்கு எதிரான முழுமையான வெற்றியால் முடி சூட்டப்பட்டுள்ளன. ஸ்லாவிய மக்களின் நீண்டகால போராட்டம், அவர்களது வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்காக, ஜெர்மானிய படையெடுப்பாளர்கள் மற்றும் ஜெர்மா னிய கொடுங்கோன்மை மீதான வெற்றியில் முடிவடைந்துள்ளது. இனி மக்களின் சுதந்திரம் மற்றும் மக்க ளிடையே அமைதியின் பெரும் கொடி ஐரோப்பாவில் பறக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஹிட்லர் தனது இலக்குகளில் சோவியத் யூனி யனை பிளவுபடுத்துவதும், அதிலிருந்து காகஸஸ், உக்ரைன், பெலாரஸ், பால்டிக் நிலங்கள் மற்றும் பிற பகுதிகளை பறிப்ப தும் அடங்கும் என்று எல்லோரும் கேட்கும் படி அறிவித்தார். அவர் வெளிப்படையாக அறிவித்தார்: “நாங்கள் ரஷ்யாவை அழித்துவிடுவோம்; அது மீண்டும் எழுந்து நிற்க முடியாது.” இது மூன்று ஆண்டுக ளுக்கு முன்பு சொன்னது. இருப்பினும், ஹிட்லரின் வெறித்தனமான எண்ணங்கள் நிறைவேற அனுமதிக்கப்படவில்லை - போரின் போக்கு அவற்றை காற்றில் சிதற டித்தது. உண்மையில், ஹிட்லரது ஊது குழல்களின் பிதற்றலுக்கு நேர் எதிர்மாறா னது நடந்துள்ளது. ஜெர்மனி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய படைகள் சரணடைகின்றன. சோவியத் யூனியன் வெற்றியைக் கொண்டாடுகிறது, இருப்பினும் நாம் ஜெர்மனியை பிளவு படுத்தவோ அழிக்கவோ உத்தேசிக்க வில்லை. தோழர்களே! மாபெரும் தாய்நாட்டுப் போர் நமது முழுமையான வெற்றியுடன் முடிந்துள்ளது. ஐரோப்பாவில் போர் காலம் முடிந்தது. அமைதியான வளர்ச்சி யின் காலம் தொடங்கியுள்ளது. உங்களை வெற்றியின் மீது நின்று வாழ்த்துகிறேன், எனது அன்பான நாட்டு மக்களே! நமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டி, பகைவனை வென்ற நமது வீரமிக்க செஞ்சேனைக்கு பெருமை உண்டாவ தாக! நமது பெரும் மக்களுக்கு, வெற்றி பெற்ற மக்களுக்கும் பெருமை உண்டாவதாக! பகைவனுக்கு எதிரான போராட்டத்தில் வீழ்ந்த, நமது மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிக்காக தங்கள் உயிரை அர்ப் பணித்த வீரர்களுக்கு நிரந்தர பெருமை உண்டாவதாக!