குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தின் தில்சுக்நகர் பகு தியில் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று அடுத்தடுத்து இர ண்டு முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப் பில் 18 பேர் உயிரி ழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த யாசின் பத்கல், வாகாஸ், ஹத்தி, மோனு, அஜாஸ் ஷேக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு இயக்குநரகம் (என்ஐஏ) 5 குற்றவாளிக ளுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரி கைகளைத் தாக்கல் செய்தது. விசார ணை முடிவில் 2016ஆம் ஆண்டு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தெலுங்கா னா உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டிருந்தது. மேல்முறையீட்டை விசா ரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.லட்சுமணன், பி.ஸ்ரீசுபா அடங்கிய அமர்வு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வழங் கிய மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்த ரவை எதிர்த்து குற்றவாளி அஜாஸ் ஷேக்கின் வழக்கறிஞர் உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள தாகத் தெரிவித்துள்ளார்.