tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வு; மக்கள் மீதான பொருளாதார யுத்தம்!

சமையல் எரிவாயு விலை உயர்வு; மக்கள் மீதான பொருளாதார யுத்தம்!

ஒன்றிய பாஜக அரசு மீது சிபிஐ(எம்) சாடல்!

சமையல் எரிவாயு விலையை,  சிலிண்டருக்கு ரூ. 50 விலை உயர்த்தி இருப்பது, நாட்டு மக்கள் மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தியிருக்கும் பொருளாதார யுத்தம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சாடியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர் த்தப்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது சிறப்பு கலால் வரி உயர்த்தப்பட்டதால், அதன் விலையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே, விலைவாசி உயர் வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களு க்கு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என்பது மேலும் ஒரு பேரிடியாகும். சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்து வரும் நிலையில், சமையல் எரி வாயு விலை உயர்வு மூலம் சுமார் ரூ. 7,000 கோடி அளவிற்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால் சுமார் ரூ. 32 ஆயிரம் கோடி அள விற்குமான சுமையை ஒன்றிய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத் துகிற இத்தகைய நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.  ஒன்றிய அரசு உடனடியாக எரி வாயு விலை மற்றும் சிறப்பு கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இத்தகைய விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொரு ளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை க்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் 

கண்டன இயக்கங்களை நடத்த  அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு எதிராக, கண்டன இயக்கங்களை நடத்துமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின அரசியல் தலைமைக்குழு நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. “கேஸ் சிலிண்டர்களின் விலையில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வையும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி விதிப்பையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. ஒன்றிய அரசு, பொது மற்றும் மானியம் பெறும் இரு பிரிவுகளிலும் கேஸ் சிலிண்டர்களின் விலையை ரூ. 50 அதிகரித்து, மக்கள் மீது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி சுமையை ஏற்றியுள்ளது. மேலும், அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரியை ரூ. 32 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பணவீக்கத்தால் ஏற்கெனவே சுமை தாங்கி வாழும் மக்களின் வாழ்வில் கேஸ் விலை உயர்வு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணெய் மற்றும் கேஸின் சர்வதேச விலை வீழ்ச்சி யின் பயன்களை மக்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசு கூடுதல் சுமைகளை சுமத்துகிறது. சிறப்பு கலால் வரி என்ற பெய ரில், கூட்டாட்சிக் கோட்பாடுகளை மீறி, அனைத்து வருவாயையும் தனக்கே சேர்த்துக் கொள்ள விரும்புகிறது. விலைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு சிபிஐ(எம்) அரசிடம் வலியுறுத்துகிறது மற்றும் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராட அனைத்து அமைப்புகளையும் அழைக்கிறது.” இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.