சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமும் நீதியும் உறுதி செய்ய வேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, இந்தியாவின் மாற்றுத்திற னாளி மக்கள்தொகை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் இழப்புகள் குறித்து ஆழ்ந்த கொந்த ளிப்பை வெளிப்படுத்துகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நிலை தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலு வலகம் (NSSO) மதிப்பீட்டின்படி, இந்தி யாவின் மாற்றுத் திறனாளிகள் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற் கும் அதிகமானோர் வறுமைக்கோட் டிற்கு கீழ் வாழ்கின்றனர். துயரகரமான வாழ்க்கை நிலைமைகள் உடல் ஊனத்திற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. உதவி சாதனங்கள், சுகா தாரம், பராமரிப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான கூடுதல் செலவு கள் அவர்களின் பரிதாபகரமான துயர நிலைமைகளை மேலும் அதிகரிக்கின் றன. மாற்றுத்திறனாளிகள் பாகுபாடு, பொருளாதார இழப்பு மற்றும் சமூக ஒதுக்குதலை எதிர்கொள்கின்றனர். நவதாராளவாத கொள்கைகளின் விளைவு மோடி அரசாங்கத்தின் கீழ் தீவிர மாக பின்பற்றப்படும் நவதாராளவாத கொள்கைகள், ஏற்கெனவே அவர்கள் அனுபவித்து வரும் மோசமான வாழ்க்கை நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளன. தனியார்மய மாக்கல், வெளியில் பணி ஒப்படைப்பு மற்றும் ஒப்பந்த முறைகள், அரசு வேலைகளில் மாற்றுத் திறனாளிக ளுக்கான நான்கு சதவீத இடஒதுக் கீட்டை நீர்த்துப்போகச் செய்கின்றன. வாழ்வாதார சவால்கள் இந்தியாவில் மாற்றுத்திறனாளி கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சவால்கள் போதுமான ஆதரவு அமை ப்புகள் இல்லாமை, அணுக முடியாத பொது உள்கட்டமைப்பு மற்றும் பணி யிடங்கள் காரணமாக அதிகரிக்கின் றன. இது கட்டமைப்பு ரீதியாகவே புறக்கணிப்பு மற்றும் பாகுபாட்டுடன் இணைந்து, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேலும் இழக்கச் செய்கிறது. உயர் வேலையின்மை விகிதம் 2011 மக்கள்தொகை கணக்கெ டுப்பின்படி, மாற்றுத்திறனாளிகளி டையே வேலையின்மை 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சிறப்பு வேலை வாய்ப்பு பரிமாற்றங்களில் பதிவு செய்தவர்களின் நியமனம் 0.9 சத வீதம் வரை குறைவாக உள்ளது. போதுமான தரவுகள் இல்லாவிட்டா லும், கிடைக்கும் தரவுகள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு விகிதம் மோசமான 0.58 சதவீதம் என்று குறிப்பிடுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) போன்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் வெட்டுகள் ஏற்கனவே கடுமையான நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன. சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தில் தங்கியிருக்கும் நிலை மாற்றுத்திறனாளி மக்கள்தொகை யின் பெரும் பிரிவினர் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை சார்ந்திருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ‘சப் கா சாத், சப் கா விகாஸ்’ என்ற பேச்சின் உண்மையான பொருளுக்கு மாறாக, மோடி அரசு இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான (IGNDPS) ஒதுக்கீடு களை அதிகரிக்க மறுத்துள்ளது. அதை கணிசமாக அதிகரிக்க நிலைக்குழு வின் பரிந்துரையும் கூட புறக்கணிக் கப்பட்டுள்ளது. 2012 முதல் மாதம் ரூ.300 என்ற கருமித்தனமான தொகையில் எந்த மேல்நோக்கிய திருத்தமும் இல்லாமல் பட்ஜெட் ஒதுக்கீ டுகள் நீண்ட காலமாக தேக்கம டைந்துள்ளன. கடுமையான தகுதி நிபந்தனைகள் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016 (RPDA) இல் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட ஒரு நபர் பல்வேறு உரி மைகளுக்கு தகுதியானவர் என்ற விதி இருந்தபோதிலும், இந்திராகாந்தி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் (IGNDPS) பெற குறைந்தபட்சம் 80 சதவீத மாற்றுத்திறன் உள்ளவராக இருக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் (BPL) வகை மற்றும் 18-29 வயது வரம்பு போன்ற கூடுதல் நிபந்தனை கள், 2011 மக்கள்தொகை கணக்கெடுப் பால் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மக்கள்தொகை யில் 96 சதவீதத்திற்கும் அதிகமா னோர் இந்த திட்டத்திலிருந்து விலக் கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. மத்திய அரசின் கொள்கைகளால் விதிக்கப்பட்ட நிதி கட்டுப்பாடுகள் மாநில அரசுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதையும் தடுக்கின்றன. சமூக பாதுகாப்புத் திட்டங்களில் குறைபாடுகள் சமூக பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைக்கும்போது, ஊனமுற்ற நிலை ஏற்படுத்தும் கூடுதல் செலவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. இதே போன்ற திட்டங்களில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் உதவித் தொகை 25 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் ஆணை மீறப்பட்டுள்ளது. கோரிக்கைகள் இந்தியாவின் மாற்றுத் திறனாளி மக்கள்தொகைக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு பின்வரும் கோரிக்கை களை முன்வைக்கிறது: 1. தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துதல். தற்காலிக, தினசரி மற்றும் ஒப்பந்த வேலைவாய்ப்புக்கு நான்கு சதவீத வேலை இடஒதுக்கீட்டை விரிவு படுத்துதல். 2.பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் உயர்வுக் கான உத்தரவாதமான ஏற்பாட்டு டன் “ஓய்வூதிய உரிமைச் சட்டத்தை” இயற்றுதல். 3.மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் பெற, பெரும்பாலானவர்களை விலக்கும் அளவுகோல்களை நீக்குதல். 4.ஓய்வூதியத்தின் மத்திய பங்கை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்துதல். 5.அனைத்து மாற்றுத்திறனாளிக ளுக்கும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) அட்டைகளை வழங்குதல். 6.பராமரிப்பாளர் ஊக்கத்தொகை வழங்குதல். - இவற்றை ஒன்றிய அரசு நிறை வேற்றிட வேண்டும் என மாநாடு வலி யுறுத்துகிறது.
இந்திய அரசின் ஆழ்கடல் சுரங்க கொள்கைக்கு சிபிஎம் எதிர்ப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, கோடிக்கணக் கான மீனவர்களின் வாழ்வாதா ரத்தை ஆபத்தில் தள்ளுவதற்கும், இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலன்களுக்காக தனியார்மயமாக்குவதற்கும், மென்மை யான கடல் சூழல் அமைப்பை நிலைகுலைப்ப தற்கும், மாநில அரசுகளின் நலன்களைக் குறைப்பதற்கும் வித்திடும் இந்திய அரசாங் கத்தின் ஆழ்கடல் சுரங்கக் கொள்கையை கண்டிக்கிறது. 2002 கடல்சார் கனிமங்கள் சட்டம் - 2023 திருத்தம் 2023ல் திருத்தப்பட்ட 2002ஆம் ஆண்டின் கடல்சார் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், ஆழ்கடல் சுரங்கம் மற்றும் ஆய்வை தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு திறந்து விடுகிறது. சமீபத்திய திருத்தத்திற்கு முன், கடல்சார் சுரங்கத்திற்கு ஜிஎஸ்ஐ, இந்திய சுரங்க பணியகம் மற்றும் அணு கனிம இயக்குநரகம் ஆகியவற்றால் கூட்டு ஆய்வு கள் தேவைப்பட்டன. இருப்பினும், திருத்தப் பட்ட சட்டம் தனியார் நிறுவனங்களும் ஆய்வில் பங்கேற்க அனுமதிக்கிறது, இது சாத்தியமான கட்டுப்பாடற்ற சுரண்டல் மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது. மத்திய அரசுக்கே அனைத்து ராயல்டி கனிம வளங்களை சுரங்கம் தோண்டி வெட்டி எடுப்பதால் கிடைக்கும் ராயல்டிகள் முழு வதும் மத்திய அரசுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என இக்கொள்கை வரையறுக்கிறது. ஆழ்கடல் சுரங்கம் கேரளாவில் உள்ள பொ துத்துறை அரிய கனிம நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் அச்சுறுத்தலாம்; அந்நிறுவனங்கள் கரையில் அடித்து வரப் படும் கனிம மணல்களை சார்ந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கடல்சார் சுரங்கம் வண்டல் அடுக்குகளை உருவாக்கு வதாகவும், கனரக உலோகங்களைக் கொண்ட நச்சுக் கழிவுநீரை வெளியிடுவதா கவும், கடல் வாழ் உயிரினங்களுக்கும், கடல் வளங்களை சார்ந்துள்ள சூழல் அமைப்புக ளுக்கும் நீண்டகால ஆபத்துகளை ஏற் படுத்துவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இது சூழல் அமைப்புகளை நிலைகுலைத்து, சுனாமிகள், சூறாவளிகள், அரிப்பு ஆகிய வற்றிற்கு எதிரான இயற்கை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தி, வண்டல் இயக்கவியலை சீர்குலைத்து, நீர்வாழ் வாழ்விடங்களை அச்சுறுத்தலாம். கடல் தரை சூழல் அமைப்பு களை சீர்குலைப்பது சேமித்து வைக்கப்பட்ட கார்பனை வெளியிட்டு, வளிமண்டல (CO2) கார்பன் டை ஆக்சைடு அளவுகளை அதி கரிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தி, உலக வெப்பமயமாதலுக்கு பங்களிக்கும். மீனவர் வாழ்வாதாரம் அச்சுறுத்தல் மீன்வள ஆதாரங்களின் குறைபாடு இந்திய மீனவர்களுக்கு ஒரு முக்கிய வாழ்வா தார சவாலாக உள்ளது. மேலும் ஆழ்கடல் சுரங்கம் நிச்சயமாக இந்த பிரச்சனையை மோசமாக்கும். எடுத்துக்காட்டாக, ஆழ்கடல் சுரங்கத் தோண்டுதலின் முதல் கட்டத்தில், வெட்டியெடுப்பதற்காக திட்டமிடப்பட்டு உள்ளடக்கப்பட்ட மணல் தொகுதிகள் கொல் லம் பரப்பு எனப்படுகிற - அரபிக்கடலின் கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்க ளுக்கு இடையிலான கடற்கரைப்பகுதிகளில் அமைந்துள்ளன; இது இந்திய கடல்களில் ஒரு வளமான மீன்வள ஆதார பகுதியாகும். அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தா மல் அனைத்து மீனவர்களும் இந்த முன்மொ ழிவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். கேரள சட்டமன்றம் கடல் மணல் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மா னத்தை நிறைவேற்றியுள்ளது. மாநாட்டின் வலியுறுத்தல் இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு நிகழக் காத்திருப்பதை முன்னறிவிக்கிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு ஒன்றிய அரசு இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வற்புறுத்துகிறது.