கோடைகால இலவச நடமாடும் கடை துவக்கம்
பெரம்பலூர், ஏப்.16 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா (எ) குணசேகரன். விவசாயி யான இவர், பெரம்பலூர் நகர் பகுதியில் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்களை தேடி நடமா டும் இலவச நீர், மோர் கடையை ஆரம்பித்து உள்ளார். இந்த நடமாடும் கடை யில் இலவச நீர், மோர் மற்றும் மலிவு விலை பழம், ஜுஸ் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த நடமா டும் கடையை, மக்கள் நல்வாழ்வுக்கான மருத்து வர் அரங்கம் மாநில செய லாளர் டாக்டர் சி.கருணா கரன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பி னர் எழுத்தாளர் இரா.எட்வின் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நைனா முகமது கல்லூரியில் முப்பெரும் விழா
அறந்தாங்கி, ஏப்.16 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியை அடுத்த இராஜேந்திரபுரம் நைனா முகமது பெண்கள் கலை அறிவியல் கல்லூரி யில் முப்பெரும் விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தாளாளர் நை.முகமது பாருக் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் காரைக் குடி இராமசாமி தமிழ் கல்லூரி உதவி பேராசிரி யர் முனைவர் இரா.கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை யாற்றினார். நைனா முக மது கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்க லைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முனை வர் சி. திருச்செல்வம் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் அசோக்ராணி, மேலாளர் மாரிச்சாமி, முனைவர் அருள்பாண்டி யன், தமிழ்த் துறை உதவி பேராசிரியை அனிதா, உதவி பேராசிரியர்கள் அகிலா, முத்துதாரணி, மாணவர்களின் பெற்றோர் கள், அனைத்துத் துறை தலைவர்கள், அலுவலக பணியாளர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக தமிழ்த் துறை தலைவர் சோபனா வரவேற்றார். கணிதத் துறை தலைவர் ஆர். வில் லியம் நன்றி கூறினார்.
ஏப்.24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஏப்.16 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத் திற்குட்பட்ட (பட்டுக் கோட்டை, பேராவூரணி, திருவோணம்) வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக் கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம், பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் ஏப்ரல் 24 (புதன்கிழமை) அன்று காலை 11 மணியள வில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக் கோட்டை கோட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திரு வோணம் வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கியை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
கரூர், ஏப்.16 - கரூர் மாவட்டம், தந்தோணி வட்டாரம் இராயனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கி அமைந்துள்ளது. இக்கிட்டங் கியில் பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்ற வேளாண் விளைபொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குளிர்பதன கிட்டங்கிக்கு மாத வாடகையாக ரூ.6191/- + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். குளிர்பதன கிடங்கிற்கான மின் கட்டணத்தை ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும் பயனாளி செலுத்த வேண்டும். மேலும் 6 மாதகால வாடகை முன்பண தொகையாக செயலாளர், விற்பனை குழு, திருச்சிராப்பள்ளி அவர்களுக்கு செலுத்த வேண்டும். எனவே 25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கியை விவசாயி கள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) இராயனூர் அலு வலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தஞ்சாவூரில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்
வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர் பெருமக்களின் வருமானத் தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2025-26 ஆம் ஆண்டு பயறு வகை கள் சாகுபடி செய்யும் விவசாயி களின் நலனைப் பாதுகாத்திடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு அறி வித்த குறைந்தபட்ச ஆதரவு விலை யில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சா வூர், கும்பகோணம், பாபநாசம், மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூல மாக உளுந்து 2,550 மெ.டன் மற்றும் பச்சைப் பயறு 60 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப் பயறு விளைபொருள்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்ப தம் 12%, இதர பொருட்கள் கலப்பு 2%, இதர தானியங்கள் கலப்பு 3%, சேத மடைந்த பயறுகள் 3%, சிறிதளவு சேதமடைந்த பயறுகள் 4%, முதிர்வ டையாத மற்றும் சுருங்கிய பயறுகள் 3%, வண்டுகள் தாக்கிய பயறுகள் 4% இருக்குமாறு நன்கு உலர வைத்து, அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டு வர விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நன்கு உலர வைக்கப் பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 வீதத்திலும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.86.82 என்ற வீதத்திலும் கொள்முதல் செய்யப் படும். விளைபொருள்களுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத் தில் 1.4.2025 முதல் 29.6.2024 வரை 90 நாட்களுக்கு உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சா வூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து, தங்களது உளுந்து மற்றும் பச்சைப் பயறினை விற்பனை செய்து பயனடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ள இத் திட்டத்தினை விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சா வூர் விற்பனைக் குழு செயலாளர் மா. சரசு கேட்டுக் கொண்டுள்ளார்.