states

img

ராம நவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் மசூதி மீது காவி கொடியேற்றி வன்முறை ; அலகாபாத்தில் பதற்றமான சூழல்

ராம நவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் மசூதி

வடமாநிலங்களில் ஏப்ரல் 6 ஞாயிறன்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தின் அலகாபாத்தில் (பிரயாக் ராஜ்) மசூதி மீது தாக்குதல் நடத்தி இந்துத்துவா குண்டர்கள் வன்முறை யில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு நெருக்கமான சுஹல்தேவ் சுரக்ஷா சமான் மன்ச் என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தின் போது சிக்கந்தராவில் உள்ள சையத் சலார் ஹாஜி தர்ஹா மீது ஏறி “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷங்க ளை எழுப்பி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக வன்முறையை தூண்டும் விதமாக மசூதியில் இருந்த பச்சை வண்ண கொடியை அகற்றி, காவி வண்ண கொடியை ஏற்றினர். இதனை அறிந்த முஸ்லிம் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தால், சிக்கந்தராவில் வன்முறை வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.  ஆனால் காவல்துறையினரை கண்டதும் சுஹல்தேவ் சுரக்ஷா சமான் மன்ச் அமைப்பின் இந்துத் துவா குண்டர்கள் ஓட்டம் பிடித்த னர். இருப்பினும் சிக்கந்தரா பகு தியில் பதற்றமான சூழல் நிலவி  வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மகாராஷ்டிராவிலும் வன்முறை

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் ராம நவமி ஒத்திகை சம்பவம் என்ற பெயரில் இந்துத்துவா குண்டர்கள் பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் மசூதியின் உள்பகுதி சேதம் அடைந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மார்ச் 30 அன்று நடைபெற்றது. ஆனால் பாஜகவிற்கு நெருக்கமான “கோடி மீடியா” ஊட கங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைத்ததால் தற்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.