states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி.,மஹுவா மொய்த்ரா

இஸ்லாமியர்கள் இந்த மண்ணில் இருக்கும்  வரை தான் நாம் இந்துக்களாக இருப்போம்.  ஒரு வேளை அவர்கள் இந்த மண்ணை விட்டு  வெளியேறினால், நாம் இந்துவாக இருக்க மாட்டோம். மாறாக பிராமணர்களாக, வைஷ்ண வர்களாக, சத்திரியர்களாக, சூத்திரர்களாக, தாழ்த்தப்பட்டோர்களாகவே இருப்போம்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்

அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன? வரிவிதிப்பிற்கு சிறிய நாடுகள் கூட எதிர்வினை தெரிவிக்கின்றன. ஆனால் ஒன்றிய மோடி அரசோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் லாலு பிரசாத் ஆட்சிக்கும் மற்றும் தற்போதைய பாஜக கூட்டணி ஆட்சிக்கும் இரண்டு வித்தியாசம் உள்ளது. லாலு ஏழை மக்களுக்கு வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தற்போதைய பாஜக கூட்டணி அரசு ஏழை மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளுகிறது.

சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்

சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் லால்  வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி மட்டுமின்றி எந்த  எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசாங்கமே பொறுப்பு. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைப்பது சரியானது அல்ல.