புல்டோசர் அரசியலின் நீட்சியே வக்பு திருத்த சட்ட முன்வடிவு!
நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., பேச்சு'
முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் புல்டோ சர், தோண்டுதல் முதலியவற்றின் தொடர்ச்சி தான் இந்த வக்பு திருத்த சட்ட முன்வடிவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் ஜான் பிரிட்டாஸ் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டா வது அமர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. 3ஆம் தேதியன்று மாலை வக்ப் திருத்தச்சட்ட முன்வடி வின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று முனை வர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது: நம் நாட்டில் ஓர் அரசியல் கட்சி இருக்கிறது. அது 2014இல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுத்திட நாங்கள் உறுதி எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் வக்பு வாரியங்களுக்கு அதிகாரம் அளிப் போம்,” என்று கூறியது. இதனைக் கூறிய கட்சி எந்தக் கட்சி. அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கட்சிதான் இவ்வாறு கூறியது. அவர்களின் தேர்தல் அறிக்கைதான் இவ் வாறு கூறியது. இன்று திடீரென்று தலைகீழ் மாற்றம். இந்தச் சட்டமுன்வடிவு நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக்கோட்பாடுகளான மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகிய அனைத்தையும் மீறும் விதத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அத னால்தான் இந்தச் சட்டமுன்வடிவினை நாங்கள் கடு மையாக எதிர்க்கிறோம்.
தேவஸ்தானங்களுக்கு பொருந்தாது
அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பாகு பாட்டை ஏற்படுத்திவிட்டார்கள். மதத்தின் அடிப்படை யில் மக்களைப் பிரித்திடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டமுன்வடிவின் மூலம் அதனைச்செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் கடவுள்களை கடவுள்களிடமிருந்து பிரிக்கிறார்கள். இந்து கடவுளை, அல்லாவிடமிருந்து பிரிக்கிறார்கள். இந்த வரையறை தேவஸ்தானங்களுக்குப் பொருந் தாது, இந்துக் கடவுளுக்கும் பொருந்தாது. இதனை அல்லாவுக்கு மட்டுமே அவர்கள் பிரயோகிக்கிறார்கள். எப்படி அவர்களால் கடவுள்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்த முடிகிறது? முன்பு அவர்கள் மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தினார்கள். இப்போது கடவுள்கள் மத்தியிலும் பாகுபாட்டை ஏற் படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சர்தார் பட்டேல், இந்த நாட்டிலிருந்து வெறுப்பை யும், வன்முறையையும் துடைத்தெறிவதற்காக ஓர் அமைப்பைத் தடை செய்திருக்கிறேன் என்று எழு தினார். அந்த அமைப்பு எது என்று இங்கே நான் குறிப்பிட விரும்பவில்லை. இதனைக் கூறியது யார்? சர்தார் வல்லபாய் பட்டேல் இதனைக் கூறினார்.
புல்டோசர் தோண்டுதலின் நீட்சி
இந்த நாட்டின் உள்ளார்ந்த எதிரிகளாக (inter nal enemies) இருப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்த வர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று யார் கூறியது? கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ்டு கள் ஆகிய இந்த மூன்று பேரும் உள் அச்சுறுத்தல் கள் என்கிற இந்தக் கூற்றிலிருந்துதான் இப்போது நடப்பவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. புல்டோசர்கள் பற்றி நிறைய பேசப் பட்டுள்ளது. இது புல்டோசர், தோண்டுதல் முதலிய வற்றின் நீட்சியாகும்.
உ.பி.,யின் கேவலமும், கேரளாவின் சிறப்பும்
ஹோலி நடைபெறும்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதிகள் மூடப்படுகின்றன. இது இந்த நாட்டின் கேவலம் இல்லையா? தயவுசெய்து கேரளாவிற்கு வந்து பாருங்கள். இந்துக்கள் யாத்ரிகர்களாக வரும் போது அவர்களுக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்க ளும் வரிசையில் நின்று உணவு பரிமாறுகிறார்கள். இதுதான் கேரளாவில் கலாச்சாரம்.
13 பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்கள்
இந்தச் சட்டமுன்வடிவின் மிகப்பெரிய வடு என்ன? வக்பு வாரியம் அல்லது வக்பு கவுன்சில் இதனை முஸ்லிம் அல்லாத நிர்வாக அமைப்பாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். வக்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் மொத்தம் 23 என்றால், அதில் 13 பேர்கள் வரை முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க முடியும். இதன் நோக்கம் என்ன? வக்பு வாரியத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது உங்கள் நோக்கமா? ஒன்றிய அரசின் கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் (சிஏஜி) கூட அதனைத் தணிக்கை செய்ய முடியும். வக்பு சொத்துக்கள் அந்நியப்படுத்தப்படுவதை நீங்கள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது, வக்பு சொத்துக்கள் அந்நியப்படுத்தப்படுவதை எளி தாக்க முயற்சிக்கிறீர்கள். அதுதான் இந்தச் சட்டமுன் வடிவின் சாராம்சம்.
அந்த மதத்தவரே நியமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு
பத்மநாபசாமி கோவில் தொடர்பாக ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அரசாங்கத்தின் சார்பாக நியமனம் செய்யப்படும் நபர் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும் என்று அது கூறியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாரி யத்திற்கு நியமிக்கப்படும் நபர் அந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்திட வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது வக்பு வாரியத்திலிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்த விரும்புகிறது. வக்பு வாரியம் ஏராளமான சொத்துக் களை உடையது என்று அது கூறிக் கொண்டி ருக்கிறது. ரிஜிஜூஜி, உங்களுக்கு வக்பு வாரியத்தின் ஆனா, ஆவன்னா கூட தெரியவில்லை. வக்பு வாரியம் என்பது வெறும் காவலர் மட்டுமே. (Waqf Board is just a custodian). இந்த நாட்டை இந்திய அரசாங்கம் ஆளு கிறது என்றால் இந்தியாவில் உள்ள நிலம் அனைத்தும் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாகி விடுமா? கிடையாது. அதனை நீங்கள் எடுத்துக்கொள் ளும்வரை அது உங்களுக்கு சொந்தமானது கிடை யாது. அதேபோன்றுதான் வக்பு வாரியமுமாகும். அடுத்து மும்மொழிக் கொள்கை குறித்து ஒரு சில வார்த்தைகள். ஆட்சியாளர்கள் மும்மொழிக் கொள்கையைத் திணித்துக் கொண்டிருப்பதால் நான் கொஞ்சம் மலையாளத்தில் பேசுகிறேன்.
கிறிஸ்தவர்கள் பெயரால் முதலைக் கண்ணீர்
இங்கே சிலர் கிறிஸ்தவர்களின் பெயரால் முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும், வட இந்தி யாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கி றார்கள். இன்றைக்கும்கூட, ஜபல்பூரில் கிறிஸ்தவர்க ளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 700 நிகழ்வுகள் நடந்துள்ளன. மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. ஸ்டேன் ஸ்வாமி. அவருடைய பெயரை நீங்கள் மறக்க முடியுமா? பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டி ருந்தவர், தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா கூட தரப்படாமல் அவதிக்குள்ளாக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்து அவரைக் கொன்றீர்கள். கிரகாம் ஸ்டெ யின்ஸை உங்களால் மறக்க முடியுமா? அவர், அவரு டைய குழந்தைகளுடன் உயிருடன் எரித்துக் கொல் லப்பட்டார். இப்போதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த அவையிலும் ஒரு யூதாஸ், முன்னா
பைபிளில் ஒரு கதாபாத்திரம். அவர் ஏசு கிறிஸ்துவை 30 சில்வர் நாணயத்திற்காக துரோகம் செய்வார். இது போன்ற கதாபாத்திரங்கள் இங்கும் இருக்கிறார்கள். ஒருசில தினங்களுக்கு முன்னால் ஒரு திரைப் படம் குறித்து பேசப்பட்டது. என்ன படம்? எம்புரான். அந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரம். அவர் பெயர் முன்னா. அந்த முன்னாவை இந்த அவையிலும் நீங்கள் பார்க்க முடியும். அந்த முன்னாவை நீங்கள் பாஜக வரி சையில் காண முடியும். கேரளாவில் சென்ற தேர்தலின்போது மலையாளி கள் தவறுதலாக ஒரு பாஜக வேட்பாளரைத் தேர்ந்தெ டுத்து விட்டார்கள். விரைவில் அது சரிசெய்யப்படும்.
சகோதர உணர்வுடன் வாழ முடியும்...
கேரளாவில் இடது முன்னணி ஐந்து லட்சம் வீடுகள் அளித்திட திறமையையும், நேர்மையையும், உறுதி யையும் பெற்றிருக்கிறது. மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். எங்களுக்கு எவர் தயவும் தேவையில்லை. எங்கள் கேரளாவில் எவரொருவரும் அச்சத்து டன் வாழ வேண்டியதில்லை. அனைவரும் அனைவ ருடனும் சகோதரவுணர்வுடன் வாழ முடியும். அத்த கையதொரு சூழலை நாங்கள் உருவாக்கி இருக்கி றோம், அதனை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கிறிஸ்தவர்க ளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறபோது மலை யாளிகள் அதனை புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்தச் சட்டமுன்வடிவை உட னடியாக விலக்கிக் கொள்ளுங்கள். மத நல்லி ணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அனைவரும் சமம் என்று நீங்கள் கருதி னால், அனைத்துக் கடவுள்களும் சமம் என்று நீங்கள் கருதினால், இந்தச் சட்டமுன்வடிவை விலக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு முனைவர் ஜான் பிரிட்டாஸ் பேசினார்.
தமிழில் : ச.வீரமணி