தஞ்சாவூர் ,ஜூன்.18- தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல் நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வ ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட் டுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை பள்ளியை திறக்கக் கூடாது. கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதால் பெற் றோர்கள் யாரும் பணம் கட்டவில்லை. இரண்டு மாதங்களாக ஆசிரியர்களு க்கு சம்பளம் வழங்கி விட்டு மேற் கொண்டு சம்பளம் வழங்க முடியாமல் பெரும்பாலான பள்ளிகள் நெருக்கடி நிலையில் உள்ளது.பள்ளி திறந்தவுடன் பள்ளி வாகனங்களை எப்.சி செய்வ தற்காக, பெயிண்ட், டிங்கர், சீட்டு, எலக்ட்ரீசியன் வேலை பார்க்க வேண்டும், இன்சூரன்ஸ், சாலை வரி, இருக்கை வரி கட்டி பழுது பார்த்து பராமரித்து பள்ளி வாகனங்களின் தகுதி சான்று பெற வேண்டும்.
தனியார் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் தமிழக அரசு உடனடியாக இந்த ஓராண்டிற்கு மின்கட்டணம், இருக்கை வரி, சொத்து வரி, காப்பீடு, பள்ளி வாகன தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு விதிவிலக்கு வழங்கி தொடர் அங்கீகாரத்தை எவ்வித நிபந்தனையும் நிர்ப்பந்தமும் இல்லாமல் எதிர்வரும் மூன்று ஆண்டு களுக்கு வழங்க வேண்டும். அதோடு தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாத சம்பளத்தை தமிழக அரசு வட்டி இல்லா கடனாக வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்க ளுக்கான நல வாரியத்தை அமைத்து தர வேண்டும் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 2018-2019 ஆம் ஆண்டில் 25 சதவீத மாணவர்களுக்கு கல்வி அளித்த வகையில், நர்சரி பிரை மரி பள்ளிகளின் கல்வி கட்டண பாக்கியை என்னும் 40 சதவீதமும், சென்னை மாவட்டத்திற்கு 100 சதவீத மும் வழங்கப்படாமல் உள்ளது.
2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி இதுவரை எந்தப் பள்ளிக்கும் வழங்கப்படவில்லை. இலவச கட்டாய கல்வி கட்டண பாக்கியை வழங்கினா லாவது அனைத்து தனியார் பள்ளிக ளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழுமையான சம்பளத்தை கொடுக்க முடியும். எனவே தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித்துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் இந்த பிரச்சனைகளை உடனடியாக தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.