tamilnadu

img

போராடிப் பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது தொழிலாளர்கள் ஆவேசப் போராட்டம்

தஞ்சாவூர், மே 10- முகவர்களுக்கு மாத ஊதியம் ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும். கொ ரோனா கதவடைப்பால் பாதிக்கப் பட்டுள்ள முகவர்களுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்கிடு. போராடிப் பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு அறைகூவலை ஏற்று, லிகாய் மாநிலக்குழு சார்பில், தஞ்சை கோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். லிகாய் மாநிலச் செயலாளர் நி.ராஜா, தஞ்சை கோட்டச் செயலா ளர் ஜி.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.  இதே போல் தொழிலாளர்களின் இஎஸ்ஐ, பிஎப் நிதியை முதலாளி களுக்கு கொடுக்கக் கூடாது. தொழி லாளர்கள் இழப்பை ஈடு செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழக தொழிலாளி வர்க்க ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் முன் செங்கொடி ஏந்தி, கோரிக்கை அட்டைகளுடன், உரிமை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் பாலாஜி நகர் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், கே.பாலமுருகன், த.முருகேசன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் முருகன், நிர்வாகி திருநாவுக்கரசு, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர்.  பூதலூரில் மாவட்டக்குழு உறுப்பி னர் முகமது சுல்தான், திருவையா றில் கிளைச் செயலாளர் மாரியப்பன், அய்யம்பேட்டையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு பி.காணிக்கை ராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம், மாரியம்மன் கோவில் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் இ.பி.எஸ்.மூர்த்தி, போக்குவரத்து சங்கம் சார்பில் ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை யில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், வீடுகள், பொது இடங்க ளில் தனிநபர் இடைவெளியுடன் செங்கொடி ஏந்தி, முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.