tamilnadu

img

நடப்பது புதிய இந்தியா’வுக்கான தேர்தலாம் மீண்டும் பீதி கிளப்பும் மோடி

‘புதிய இந்தியா’வை உருவாக்கப் போகிறேன் என்று கூறித்தான் 2014-இல் இந்தியமக்களை ஏமாற்றி மோடி ஆட்சிக்கு வந்தார். தேர்தலுக்கு முன்பு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலை தருவேன்; வங்கிக் கணக்கில் ஆளொன்றுக்கு ரூ. 15 லட்சம் போடுவேன் என்றெல்லாம் சொன்னவர், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி கொண்டுவந்து, இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறித்துக் கொண்டு, ஏழை மக்களைத் தெருவில் தள்ளினார். பல ஆண்டுகள் சிறுகச்சிறுக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரும் மோடியின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. ஆனால், ‘புதிய இந்தியாபிறந்து விட்டது’ என்று மோடியும், பாஜக-வினரும் கூறிக்கொண்டனர். புதிய இந்தியாவெல்லாம் வேண்டாம்; ஏற்கெனவே உள்ள இந்தியாவை அப்படியே விட்டால்போதும் என்று இப்போதுவரை மக்கள் கதறுவது அவர்களுக்கு கேட்கவில்லை. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ‘புதியஇந்தியாவை உருவாக்குவதுதான் தனது லட்சியம்’ என்று நாட்டு மக்களிடம் மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளார். “மக்களவைத் தேர்தலில் உங்கள் தொகுதியின் எம்.பி.க்காகவோ, மத்தியில் அடுத்து ஆட்சி செய்யப் போகும் பிரதமருக்காகவோ நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. ‘புதிய இந்தியா’ உருவாவதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்பதை மனத்தில் வைத்துவாக்களியுங்கள்” என்று வசியமாக மோடி பேசியுள்ளார்.மோடி இந்தப் பேச்சைஎதிர்க்கட்சிகளும் வழிமொழிந்துள்ளன. எப்படியென்றால், “மோடி ஏற்கெனவே உருவாக்கிய ‘புதியஇந்தியா’வில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையிழந்து, சாலைகளில் அலைந்து கொண்டிருப்பதை கட்டாயமாக எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.