tamilnadu

img

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை, செப்.24- விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் பேட்டியிடு கின்றன.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் திமுக தலைமைய கமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் துரைசாமி , அமைப்புச்செய லாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகி யோர் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொரு ளாளர் நா.புகழேந்தி அறி விக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறி விப்பில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க. வேட்பாளராக, நா. புகழேந்தி போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுகவில் கடந்த 1973ஆம் ஆண்டு கிளைக் கழக செயலாள ரானது முதல் புகழேந்தி பொறுப்பு களை வகித்து வருகிறார். விவ சாயத்தை பின்னணியாக கொண்டவர். அவரது சொந்த ஊர், விழுப்புரம் வட்டம் அத்தி யூர் திருவாதி ஆகும். 66 வயதாகும் புகழேந்தியின் மனைவி கிருஷ்ணம்மாள். ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக புகழேந்தி போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்திருக்கிறார். 1987 ஆம் ஆண்டில் இந்தியை எதிர்த்து சட்ட  நகல் எரிப்பு போராட்டம், இலவச மின்சாரம் ரத்து செய்தபோது 1991 ஆம் ஆண்டில் நடந்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். 1986-ல் ஊராட்சி மன்றத் தலை வர், 1999-ல் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கி தலை வர், 1996 ஆம் ஆண்டில் கோலிய னூர் ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார்.