பாபநாசம் பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'முதல்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பதால் த்ரில்லாக உள்ளது. ஜீத்து ஜோசப் அவர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம். இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்குவதை அடுத்து படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.