ஜோதிகா வின் ஜாக்பாட் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.
கல்யாண் இயக்கத்தில் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வந்தார். இந்த படத்துக்கு ஜாக்பாட் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கிறார். அவருடன் ரேவதியும் போலீசாக நடித்து இருக்கிறார்.
ஜோதிகா, ரேவதி,யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.