tamilnadu

img

கீழடியில் வீடுகள் தோறும் உறை கிணறுகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு...

சிவகங்கை:
கீழடி அகழாய்வில் இதுவரை 16 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.இதனால்வீடுகள்தோறும் உறைகிணறுகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இம்மாதத்துடன் முடிவடைய வுள்ளது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகளில் கீழடி மற்றும் அகரத்தில் மட்டும் இதுவரை 16 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. இதில் தமிழ்நாட்டி லேயே மிகப்பெரிய 32 அடுக்குகளை கொண்டஉறைகிணறு ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியில் கண்டறியப்பட்டது.தொடர்ச்சியாக அகழாய்வில் உறைகிணறுகள் கண்டறியப்பட்டதால் வீடுகள் தோறும் உறைகிணறுகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதப்படுகிறது.ஆறாம் கட்ட அகழாய்வில் உறைகிணறுகளின் அருகில்சிறிய பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய அகழாய்விலும் உறைகிணறு களைவிட்டு சற்று தள்ளி சிறிய பானைகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் தண்ணீரை பாதுகாப்புடன் அருந்துவதற்கு வசதியாக உறைகிணறுகளை பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.வெள்ளப்பெருக்கு, பூகம்பம் உள்ளிட்டஇயற்கை பேரழிவால் வைகை ஆறு தனதுபாதையை மாற்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்  கீழடி, அகரம் உள்ளிட்டவைகள் வைகை நதிக்கரையோரம் இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் அங்கு வணிகம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் வணிகர்களுக்காக குடில்கள், உறைகிணறுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.