சேலம், ஜூலை 6- தமிழகத்தில் உயர் மின்னழுத்த கோபுரம், எட்டு வழி சாலை திட்டங்கள் உள்ளிட்ட விளைநிலங்களை பாதிக்கும் அரசின் திட்டங்களை எதிர்த்து ஜூலை 18ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளைநிலங்களை அழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில், விவசாயிகள் சங்கங்களது கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் சனியன்று நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட ங்களில் விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளை நிலங்களில் அத்துமீறி அமைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் விவ சாயிகள் மீது அரசும், காவல் துறை யினரும் எண்ணற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. பொய் வழக்கு களைப் போட்டு கைது செய்கின்றனர்.
பொய் உரைக்கும் தமிழக அரசு
முன்னதாக, விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரத்தை அமைப்பதற்கு மாற்றாக சாலை ஓரங்களிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களிலும் கேபிள் வழியாக உயர் மின் அழுத்த கோபுர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினோம். இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, அதற்கான தொழில்நுட்பம் உலக அள வில் இல்லை என பொய் உரைக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு மத்திய மோடி அரசாங்கம் கொச்சி முதல் தென் ஆப்பிரிக்கா வரை 3600 கிலோ மீட்டர் தொலைவிற்கு 1100 கிலோ வாட் மின்சாரத்தை கேபிள் வெளியே கொண்டு செல்ல கையெழுத்திட்டுள் ளது. மேலும் குஜராத் மாநிலம் போர் பந்தர் முதல் சவூதி அரேபியா வரை 3100 கிலோமீட்டர் தொலைவிற்கு 1,100 கிலோ வாட் மின்சாரத்தைக் கேபிளில் கொண்டு செல்ல மத்திய மோடி அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இது மட்டும் எப்படி சாத்தியமானது? மேலும், உயர் மின்னழுத்த கோபுரத்தில் அதிக மின் கசிவு ஏற்படு கிறது என்பதை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். இது சம்பந்தமாக இதுவரை அதிகாரிகளும், அரசும் எந்த பதிலும் கூறவில்லை. மின்னழுத்த கோபுரம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது விவாதம் நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதா?
விளை நிலங்களை அழிக்கும் எடப்பாடியார்
இதேபோல், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி பகுதி வரை விளைநிலங்களில் பெட்ரோல் குழாய் அமைக்க விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தற்போதைய எடப்பாடி அரசாங்கம் விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு
மேலும், சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை என்ற பெயரில் எண்ணிலடங்கா விளைநிலங்களையும், இயற்கை வளங்களை அழிப்பதை தடை செய்து உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த தீர்ப்பில் எட்டுவார காலத்திற்குள் விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட விளைநிலங்களையும், எட்டு வழிச் சாலை குறித்த ஆவணங் களையும் விவசாயிகளிடம் திருப்பி வழங்க வேண்டும் எனவும் உத்தர விட்டது, தற்போது 12 வார காலம் கடந்தும், தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தரவில்லை. தமிழக அரசு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொட ரப்படும். மேற்கண்ட இந்த மூன்று கோரிக்கை களை வலியுறுத்தி வரும் ஜூலை 18ஆம் தேதியன்று ஈரோடு மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப் படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் டி.ரவீந்திரன், கண்ணன், மதுசூதனன் உள்ளிட்டு சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.