districts

img

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்டம் ஒத்திவைப்பு

பொன்னமராவதி,  ஜூலை 7- பொன்னமராவதி ஒன்றி யம் ஆலவயல் ஊராட்சியில் பணிபுரியும் 12 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கு நர்களுக்கு கடந்த 40 மாதங்  களாக சம்பளம் வழங்கப் படாததை கண்டித்தும், உட னடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை  தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  இந்நிலையில், ஆல வயல் ஊராட்சி மன்ற தலை வர் சந்திரா சக்திவேல் தலை மையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், 12 தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்தி ஊதியம் வழங்கி, கணினியில் பதிவேற்றம் செய்திட ஊராட்சி நிர்வாகத் தின் மூலம் உரிய அழுத்தம்  தருவது எனவும், இது தொடர்  பாக ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாகவும் மாவட்ட ஆட்சி யர் மூலமாகவும் கணினி பதி வேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சதாசிவம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலி ஜின்னா, துணைத்  தலைவர் சி.அன்பு மணவா ளன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் என்.பக்ருதீன், டிஒய் எப்ஐ ஒன்றியப் பொறுப்பா ளர் கே.குமார், தீன் உள்  ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.