districts

கோவில் விழாக்களில் சாதியப் பாகுபாடு கூடாது விவசாயிகள் சங்கம் மனு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பொன்னமராவதி, ஆக.24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன் னமராவதி தாலுகா கீரங்குடி கிராமத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பு குடும் பத்தினர் உட்பட எட்டு குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து தரப்பு மக்களும்  பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு உயர் அதிகாரி களுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ப.சுந்தரராஜன் அளித்த மனுவின் அடிப்படையில், பொன்னமராவதி வட்டாட்சியர் பிர காஷ் தலைமையில் சமாதான கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுந்தர ராஜன் தரப்பினர், “கீரங்குடி கிராமத் தில் ஆதிமூல கணபதி, பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் கும்பா பிஷேக விழா நடத்துவது பற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் தெரி விக்கவில்லை. 2015 இல் நடைபெற்ற கருப்பர் திருவிழாவில் எங்களுக்கு இது வரை கோவில் பிரசாதம் ஏதும் வழங்கப் படவில்லை. அதேபோல தற்போதும் சாதிய பாகுபாடு காரணமாக, கோவி லின் விபூதி மற்றும் பிரசாதம் ஏதும் வழங்காமல்தான் இருப்பர் என எதிர்பார்க்கிறோம்.

கோவில் கட்டிய வரவு-செலவு விவரம் மற்றும் வரி வசூல் செய்த விவரம் குறித்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளை தெரிவித்தனர். கூட்ட முடிவில், 29.8.2022 அன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகம் மற்றும் அதனை தொடர்ந்து வரும்  அனைத்து விழாக்களையும் இரு தரப்பி னரும் இணைந்து நடத்த வேண்டும். கும்பாபிஷேக விழாவில், சாதியப் பாகு பாடின்றி அனைவருக்கும் விபூதி மற்றும் பிரசாதம் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அந்த கோவிலில் அனைத்து சாதியினரும் இணைந்து சாமி கும்பிட வேண்டும் என  முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பின ருக்கும் இடையே உள்ள வேறு பிரச்ச னைகளை தனியாக பேசி தீர்த்துக்  கொள்வது என்றும், விழாவிற்கு உரிய  பாதுகாப்பு வழங்க காவல்துறையின ருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு  செய்து இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேற்படி கூறிய எட்டு குடும்பத்தினர் சாகுபடி செய்யும் வார நிலங்களில் வெட்டப்பட்ட விறகுகளுக்கு உண்டான  பங்குத்தொகையை, மற்றொரு தரப்பி னர் கொடுக்காமல் ஏமாற்றி வருவதே பிரச்சனைக்கு மூலக்காரணம்.