districts

புகளூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கரூர், டிச.6- கரூர் மாவட்டம் புகளூர் இஐடி பாரி  சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த வேளையில் சிஐடியு, தொ. மு.ச. தலைவர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டனர்.  இதனை கண்டித்து டிசம்பர் 1-ஆம் தேதி யிலிருந்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்து வந்தனர். ஆலை யின் உள்ளே அமைதியான முறையில் போராடிய தொழிலாளர்களுக்கு நிர்வாகம் உணவும், தண்ணீரும் தர மறுத்தது. போ ராடிய தொழிலாளர்கள் மீது நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும், அடக்கு முறையையும் ஏவியது. இதற்கிடையில், திண்டுக்கல் தொழிலா ளர் துறை துணை ஆணையர் கோவிந்தன் முன்பாக 5.12.22 அன்று சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. சிஐடியு, தொமுச  தலைவர்களும், நிர்வாக தரப்பு உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட 5  தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்தமாக தொழிலாளர் துறை துணை ஆணையர் முன்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்து வது என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  காரணத்திற்காக தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் நிர்வாகம் மேற் கொள்ளக் கூடாது என்ற அறிவுரையை இரு  தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவது என்று  முடிவு செய்யப்பட்டது. ஆலை வாயிற் கூட்டம் நடத்தப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்து, அனைத்து உதவிகளும் செய்த  நகராட்சித் தலைவர் குணசேகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.