தமிழ்நாட்டில் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பின்பு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் மருத்துவக் கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.