பாபநாசம், டிச.1- சுவாமிமலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங் குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கச் செயலர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் தங்க காசிநாதன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் செந் தில் குமார், கண்ணன், தே.தெ.ந.இ. விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு, காவேரி பாசன வி.பா.சங்க தலைவர் முருகன், தமி ழக உழவர் முன்னணி தலைமைச் செயற்குழு முருகன் உட்பட பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில், சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயி கள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழுத்தொகை மற்றும் 5 ஏ பிரைஸ் முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.