tamilnadu

ஆடு மேய்க்க வனத்துறையினர் பணம் கேட்டால் கடும் நடவடிக்கை தம்மம்பட்டி வனச்சரகர் எச்சரிக்கை

\சேலம், ஜூன் 27- வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க பணம் வசூலிக்கும் வனத்துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என தம்மம்பட்டி வனச்சரகர் எச்சரித்துள்ளார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திலுள்ள சின்ன கரட்டூர், பெரிய கரட்டூர், நினங்கரை நரி பாடி, நல்ல மாத்தி  ஆகிய மலைக் கிராமங்களில் தம்மம்பட்டி வனத்துறையினர் ஆடு மேய்சலுக்கு மாதம் தலா 10 ரூபாய் வீதம் ஒரு ஆட்டிற்கு என வசூல் செய்து வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று தம்மம் பட்டி வனச்சரகர் அசோக்குமாரிடம் மனு கொடுக்கப்பட் டது.  இதனையடுத்து வனச்சரகர் அசோக்குமார், இனி மேற் கண்ட மலை கிராமத்தில் ஆடு மேய்சலுக்கு பணம் பெறப் படாது என உறுதியளித்ததுடன், வனத்துறையினர் பணம் கேட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். முன்னதாக, இம்மனுவினை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முருகேசன், கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதிகுமார் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் அளித்தனர்.