tamilnadu

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்

இராமேஸ்வரம், ஆக.3- தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டத்தை முறையாக அமல் படுத்த வேண்டும். இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல்பகுதி யில் மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அரை நாட்டிகலுக்கும் குறைவான தூரம் வரை வந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.  மீன்வளத்தை முழு மையாக அழித்து வரும் சுருக்குமடி மீன் பிடிப்பை முற்றாக தடை செய்ய வேண்டும்.  தடையை மீறி சுருக்குமடி மீன்பிடிப்பில் ஈடுபடும் வல்லங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.  ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீசன் தொழில் என்று சொல்லிக் கொண்டு கடல் வளம் மற்றும் மீன் வளத்தை முழுமையாக அழித்தொ ழிக்கும் இரட்டை மடி மீன்பிடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இராம நாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத இரட்டைமடி, சுருக்குமடி தொடர காரண மான மீன்வளத்துறை அதிகாரிகள் மீது  பொது விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மீன வர்கள் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலைமையில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலு வலகத்தில்  திங்களன்று காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.ஐஸடீன், மாவட் டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி மற்றும் கிராமத் தலைவர்கள் பங்கேற்றனர்.