tamilnadu

img

‘மார்க்சிஸ்ட்’ இதழுக்கு 1088 சந்தாக்கள் அளிப்பு

நாகையில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

நாகப்பட்டினம், அக்.2- ‘மார்க்சிஸ்ட்’  தத்துவார்த்த மாத இதழ் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாகை மாவட்டக் குழு  நடத்திய “கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு  விழா” மற்றும் சிறப்புக் கருத்தரங்கம், நாகப்பட்டினம், யாழிசை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் மாத இதழுக்காக 1088 சந்தா சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம், நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி வழங்கினார். முன்னதாக, ‘மக்களிசைப் பாடகர்’ எஸ்.மோகன் இங்கர்சால் இயக்கப் பாடல்கள் பாடினார். விழாவிற்கு சி.பி.எம். மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான நாகைமாலி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் வரவேற் புரையாற்றினார். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

“மார்க்சின் புரட்சிக் காவியம் - கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை” என்னும் பொரு ளில் சி.பி.எம்.  மாநிலக்குழு உறுப்பின ரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமாகிய பி.சுகந்தி கருத்துரை யாற்றினார். “கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடி பி.சீனிவாசராவ்” என்னும் பொருளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரு மாகிய பெ.சண்முகம் சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் நன்றி கூறினார்.

‘மார்க்சிஸ்ட்’ சந்தா அளிப்பு

‘மார்க்சிஸ்ட்‘  தத்துவ மாத இதழ் வளர்ச்சிக்காக, நாகை மாவட்டம் சார்பில் 439 சந்தா, புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 252, திருவாரூர் மாவட்டம் சார்பில் 250, திருச்சி மாவட்டம் சார்பில் 102, கரூர் மாவட்டம் சார்பில் 50 என மொத்தம் 1088 சந்தாக்களுக்கான ரூ.1,74,080 தொகையை, நாகைமாலி பெ.சண்முகத்திடம் வழங்கினார். இவ்விழாவில் 400-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.