பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் பி.உமாமகேசுவரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரிய 384 பயனாளிகளுக்கு ரூ 86.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொன்னமராவதி வட்டாட்சியர் ஆ.திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராம.பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.