அரியலூர், அக்.13- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த த.வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் புதனன்று நடைபெற்றது. முகாமிற்கு எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சார்பில் 151 பயனாளிகளுக்கு ரூ.62,96,622 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று, சம்பந்தப்பட்ட துறை களின் திட்டங்கள் குறித்து பேசினர். முன்னதாக பொது சுகாதாரத்துறை, தோட்டக் கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை, ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.