மயிலாடுதுறை, டிச.19- மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவி லில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி 500 மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. திமுக மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும் திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முரு கன், 500 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, போர்வை, ஊட்டச்சத்து தரக்கூடிய பத்து வகையான சத்து மாவுகள் மற்றும் ஐநூறு ரூபாய் ரொக்கப பணம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.