districts

img

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜன.11-  புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கிள்ளுக்  கோட்டை கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் புதனன்று நடை பெற்றது.  முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 1474 பயனாளிகளுக்கு ரூ.2,20, 90,830 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் நா.கவிதப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.