tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி: மத்திய அரசின் முடிவைக் கண்டித்து பிப்.13-ல் தொடர் முழக்கப் போராட்டம்

புதுக்கோட்டை, பிப்.5- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி யோ, சம்மந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துகளோ அவசியம் இல்லை என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் வருகின்ற பிப்ரவரி 13 அன்று விவசாயிகள் தொடர்முழக் கப் போராட்டம் நடத்தவுள்ளனர். காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நெடுவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயலும் மத்திய அரசை கண்டித்தும், விவ சாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, மத்திய சுற்றுசூழல் துறையின் அனுமதி தேவையில்லை, சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் கருத்து கேட்டு கூட்டங்கள் நடத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியில், நெடுவாசலை சுற்றி யுள்ள மக்களோடு இணைந்து மாவட் டத்திலுள்ள விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து தொடர் முழக்க போராட்டம் நடத்து வது எனவும், தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான விவ சாயிகளை ஒன்று திரட்டி தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மு.மாதவன், இந்திய விவ சாயிகள் சங்கத் தலைவர் ஜி.எஸ்.தனபதி, மற்றும் மிசா.மாரிமுத்து, விடு தலைக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சி.சோமையா வரவேற்க ராமையா நன்றி கூறினார்.