புதுக்கோட்டை, ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கென புத்த கங்கள், மாதாந்திர போட்டி இதழ்கள் மற்றும் பத்திரிகை அடங்கிய நூலக மும் செயல்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் தொகுதி- ஐஏ தேர்வில் மாணவ, மாணவிகள் வெற்றி பெறு வதற்குத் தேவையான இலவச பயிற்சி வகுப்பு வரும் புதன் கிழமை முதல் அலுவலக வேலை நாளில் தின மும் காலை 10 முதல் 5 மணி வரை நடை பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.