சேலம், ஜன. 20- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி.1 முதல்நிலைத் தேர்வுபணிக்காலியிடங்க ளுக்கு விண்ணப்பதாரர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இவ்வகுப்பா னது, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக ஜன. 23ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள தொகுதி.1 முதல்நிலைத் தேர்வு பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்க ளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூல மாக ஜன.23ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட் டும் மையத்தில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும், பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பித்த விவரங்களுடன் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.