டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் சென்னை மண்டலம் சார்பில் டாஸ்மாக் இளநிலை உதவியாளர் சிறப்பு தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று (ஜூலை20) அயன்புரம் நிர்மல் பள்ளியில் இதனை சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கிவைத்தார். டாஸ்மாக் சங்க நிர்வாகி ராமு தலைமை தாங்கினார். டாஸ்மாக் பொதுமேலாளர் முனுசாமி, தென்சென்னை மாவட்டத்தலைவர் பொன்முடி, டாஸ்மாக் ஊழியர்க சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டஅமைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.