districts

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

விழுப்புரம், ஏப். 10 - தமிழ்நாடு தேர்வாணையம் குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28ந் தேதியாகும். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏப்.13ந் தேதி தொடங்கவுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள தேர்வர்கள், மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.