புதுக்கோட்டை:
எய்டு இந்தியா மற்றும் சோடியூஸ் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கஜா புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வுத்திட்டமாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் சனிக்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆண்டவராய சமுத்திரம் கிராமத்தில் பயனளாளிகளான பீட்டர், உஷாராணி, ரவிச்சந்திரன் மற்றும் பாக்கியநாதன் ஆகியோருக்கு கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. புதிய வீடுகள் திறப்பு விழாவிற்கு கவிஞர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். எய்டு இந்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா கருத்துரை வழங்கினார்.அவர் பேசும்போது, எய்டு இந்தியாயுரேகா வீடு திட்டம் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் 480 வீடுகளுக்கு மேல் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 16 இல்லங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும், நான்கு வீடுகளுக்கானகட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில் சுமார்30 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு ‘ஆகா குரு’ இணையவழி மூலம் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தென்றல் கருப்பையா, ஏ.பாலசுப்பிரமணியன், கவிஞர் சு.கவிபாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.