tamilnadu

img

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கான பதவிகளை உடனடியாக நிரப்புக!

மதுரை:
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கான பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசைதலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தலித் விடுதலைஇயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அளவில் தாழ்த்தப்பட்டவர் கள் மீதான வன்கொடுமைகள் ஒவ் வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேவருவதனை தேசிய குற்ற ஆவண மையஅறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன.இந்த வன்கொடுமைகளை கட்டுப்படுத்துவதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் மத்திய, மாநில  அரசுகள் பின்பற்றுவதில்லை.இதனை கண்காணிக்க வேண்டியஅமைப்புதான் தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் முதலான பதவிகள் நிரப்பப்பட உள்ளது.

என்பதனை குறித்து தலித் விடுதலை இயக்கம் கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசின் சமூக நீதி மற்றும்மேம்பாட்டு துறைக்கு புகார் மனுக்கள்அனுப்பப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண்: W.P. (MDU) NO : 8050 2017-ல்வழக்கும் தொடரப்பட்டு வழக்கில் கடந்த11.7.2017 அன்று” உரிய நடவடிக்கைஎடுக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.இதனால், தேசிய தாழ்த்தப்பட் டோர் தலைமையகத்தில் (தில்லியில்) தலைவர், துணைத் தலைவர் நியமிக கப்பட்டனர். மற்ற 3 உறுப்பினர்கள், செயலாளர்கள் 8 பதவிகள் நியமிக்கப்படவில்லை.மேலும், இந்திய அளவில் உள்ள 12 மண்டல அலுவலகங்களில் இயக்குனர், உதவி இயக்குனர் போன்ற பல் வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.குறிப்பாக சென்னை மண்டலஅலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்டகாலியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளுக் கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. என்பதனை குறித்து மீண்டுமாக 12.4.2019 இல் நினைவூட்டல் கடிதம் மத்தியஅரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்
துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு6.5.2019-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு எண் W.P.(MDU) NO: 11766/2019 -ல் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

என்பதோடு நீதிமன்றத்தில் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பாக எந்த விதமான மனுவும் கூட தாக்கல் செய்யப்படவில்லை.தற்சமயம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத் தலைவர் முருகன் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலதலைவராக பொறுப்பேற்றதில் இருந்துதலைமையகத்தில் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர், செயலாளர் ஆகிய  பதவிகளும் காலியாக உள்ளது.அதிலும் குறிப்பாக கொரோனாவின் கொடூரமான தாக்கத்தில் கூட தமிழகத்தில் தலித் இளைஞர்கள் படுகொலைகள், சாதி ஆவண படுகொலைகள்.  தலித்சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைபோன்ற சம்பவங்களில் தாழ்த்தப்பட் டோர் ஆணையத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடுவதற்கு தேசிய ஆணையத்திலோ தமிழ்நாட்டில் இருக்கும் மண்டல அலுவலகத்திலோ எவரும் இல்லாத நிலையில் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மைநிலைகளை மத்திய, மாநில அரசுக்குஎடுத்துச் சொல்லவும். வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமுறைப் படுத்த முடியாத அவல நிலையை குறித்தும் மீண்டுமாக தலித் விடுதலை இயக்கம் சார்பாக 23.06.2020-ல் மத்திய அரசின் சமூக நீதி (ம) மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு 3-வது முறையாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமையகம், தமிழகத்தில் மண்டல அலுவலகத்தில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள 11 நிரந்தரப் பணிக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.