புதுக்கோட்டை, ஜன.11- புதுக்கோட்டை மாவட்ட ஊரா ட்சிக் குழுவில் பெரும்பான்மையை திமுக அணி வைத்திருந்தும் கூட, குதிரைபேரத்தால் தலைவர் பதவி யை அதிமுக கைப்பற்றியது. ஊரா ட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்தலி லும் 9 தலைவர் பதவியிடங்களை திமுகவும், 4 தலைவர் பதவி யிடங்களை அதிமுகவும் பெற்றன. புதுக்கோட்டை மாவட்ட ஊரா ட்சிக் குழுவில் மொத்தம் 22 உறுப்பி னர்கள். இதில், 11 உறுப்பின ர்களை திமுகவும், 2 உறுப்பின ர்களை காங்கிரஸ் கட்சியும், 8 உறு ப்பினர்களை அதிமுகவும், ஒரு உறு ப்பினரை தமிழ் மாநில காங்கிரசும் பெற்றன. திமுக அணியில் மொத்தம் 13 பேர் இருந்தனர். அதிமுக அணி யில் 9 பேர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு அலுவ லகத்தில் தலைவர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தேர்தல் நடத்தும் அலுவலராகச் செயல்பட்டார். திமுக சார்பில் 17 வது வார்டு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் 8வது வார்டு உறுப்பினர் த.ஜெய லட்சுமியும் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை அளித்தனர். இதையடுத்து வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணி க்கையின் முடிவில், அதிமுக உறு ப்பினர் த.ஜெயலட்சுமி 12 வாக்குக ளைப் பெற்று தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மை யைக் கொண்டிருந்த திமுக உறுப்பி னர் கலைவாணி சுப்பிரமணியன் 10 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வி யடைந்தார். திமுக உறுப்பினர்கள் மட்டுமே 11 பேர் இருந்தும், தலைவர் தேர்த லுக்கான திமுக வேட்பாளர் ஒன்று குறைந்து 10 வாக்குகளைப் பெற்றது புதுக்கோட்டையில் திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஆளுங்கட்சி என்ற அரா ஜகத்தில் குதிரைபேரம் நடத்தி இந்த வெற்றியை அதிமுக கைப்ப ற்றியுள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிகளை மதிக்காததால் திமுக தோல்வியடைந்ததாகவும் கூறப்படு கிறது. ஊராட்சி ஒன்றியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியிடங்களில் 9 இட ங்களை திமுகவும், 4 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமை காலை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. அன்னவாசலில் இரு வேட்பாளர்களுக்கும் சரிசம வாக்குகள் கிடைத்ததால் குலுக்கல் முறையில் அதிமுக உறுப்பி னர் வி.ராமசாமி தேர்வு செய்யப்ப ட்டார். மணமேல்குடியில் ஏ.கார்த்தி கேயன் (திமுக), திருமயத்தில் ஏ.எல்.ராமு(அதிமுக) ஆகியோர் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அறந்தாங்கியில் எஸ்.மகே ஸ்வரி(திமுக), அரிமளத்தில் எம்.மேகலா(திமுக), ஆவுடை யார்கோவிலில் கே.உமாதேவி (திமுக), கந்தர்வகோட்டையில் ஆர்.ரத்தினவேல்(அதிமுக), கறம்ப க்குடியில் ஆர்.மாலா(திமுக), குன்றாண்டார்கோவிலில் பி.பாண்டி ச்செல்வி(திமுக), பொன்னமராவதி யில் ஏ.சுதா(திமுக) புதுக்கோ ட்டையில் பி.சின்னை(அதிமுக), திருமயத்தில் ஏ.எல்.ராமு (அதிமுக) திருவரங்குளத்தில் டி.வள்ளியம்மை(திமுக), விராலி மலையில் எம்.காமு(திமுக) ஆகி யோரும் ஒன்றியக்குழுத் தலைவர்களாகத் தேர்வு செய்ய ப்பட்டனர். மாலையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஒன்றி யக்குழுத் துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அனைத்து ஊராட்சி மன்றத்துக்கும் துணைத் தலைவர்களும் சனிக்கிழ மையன்று தேர்வு செய்யப்பட்டனர்.