அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஜேசிஜ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்கள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தலைமையாசிரி யர் பா.கலைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். மருத்துவர்கள் டாக்டர் எஸ்.விக்னேஷ், பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் டாக்டர் எம். சுபா வசந்தகுமார் கலந்து கொண்டார்கள். சுமார் 96 பெற்றோர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் ஜேசிஜ சூப்பர் கிங்ஸின் தலைவர் ஆண்டோ பிரவீன், செயலாளர் எஸ்.மதன், துணைத் தலைவர் ஸ்ரீதர், விஜயகுமார், உறுப்பினர் முகமது அலி மற்றும் முன்னாள் தலைவர் வெங்கட்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக பள்ளி ஆங்கில ஆசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.