பென்னாகரம், ஜூலை 27- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம் பென்னாகரத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல் வித்துறை சார்பில் வட்டார அளவில் 1 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம் பென்னாகரம் வட்டார வள மையத்தில் நடை பெற்றது. இந்த முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவ லர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட உதவி திட்ட ஒருங் கிணைப்பாளர் தங்கவேலு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இம்முகாமில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், வீல் சேர், காது கேளாதோர் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் 248 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகரன், அன்பு வளவன், சின்னப் பள்ளத்தூர் தலைமை ஆசிரியர் பழனி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.