ரேபிஸ் தடுப்பூசிகளைக் கையாள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தெருக்களில் குழந்தைகளை நாய்கள் கடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறையாகத் தடுப்பூசி செலுத்தாத தெருநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் தொற்று ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்நிலையில் ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
1.நாய்கள் கடித்து சிராய்ப்பு, காயங்கள் ஏற்பட்டால் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்
2.ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும்.
3.தடுப்பூசிகளைச் சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
4.காயத்தின் ஆழத்தைப் பொறுத்து 3 வகைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
5.ஆழமான காயங்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியுடன் சேர்த்து ஆர்ஐஜி எனப்படும் தடுப்பு மருந்தைச் செலுத்த வேண்டும்.
6.விலங்குகளின் நாக்கு படுவதாலோ, அவற்றைத் தொடுவதாலோ, உணவளிப்பதாலோ ரேபிஸ் பரவாது.