tamilnadu

img

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

சேலம், அக்.15-  சேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்ற டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது.  தமிழகத்தில் தற்பொழுது டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திற னாளி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி சேலம் காந்தி சாலை பகுதியில் தொடங்கி அஸ்தம்பட்டி, இட்டேரி சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இந்த பேரணி யில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் டெங்கு தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.  இந்நிகழ்ச்சி யில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசுத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.