சேலம், மார்ச் 11- சேலம் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் வரதட்சணை எதிர்ப்பு தின விழிப் புணர்வு பேரணியை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரதட்சணை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் வரதட்சணை எதிர்ப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூகநல துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான இலவச உதவி எண். 181 குறித்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. வரதட்சணை எதிர்ப்பு பேரணியில் 350க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் சமூகநல துறையின் கீழ் செயல் படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் பெண் களுக்கான இலவச உதவி எண்.181 குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்களுக்கு வழங்கினார். இப்பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரெ.கார்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் பரிமளாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் உமா மகேஷ்வரி மற்றும் தொடர் புடைய அலுவலர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.