tamilnadu

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் சாதனைகள்: அரசு பெருமிதம்

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் சாதனைகள்: அரசு பெருமிதம் 

சென்னை, ஜூலை 6 - சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை களின் மூலம் பல்வேறு சாதனைகள் புரிந்து ள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட ‘நான்  முதல்வன் திட்டம்’ தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைப்பை மாற்றியமைக்கும் மாபெரும் திட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்கள் மற்றும் 1 லட்சத்து 960 விரிவுரையாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். பொறி யியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங் fளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு கடந்த நான்கு ஆண்டுகளில் 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 1,01,973 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 29 அரசு பொறி யியல் கல்லூரிகளில் 30.17 கோடி ரூபாயில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன் கற்றல் அங்கீகாரத்தின் கீழ் 1,13,940 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் உயர்வுக்குப்படி திட்டத்தின் மூலம் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறு வனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் 1 லட்சத்து  87 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ள னர். குடிமைப் பணித் தேர்வில் 2022 இல் 36 பேர், 2023 இல் 47 பேர், 2024 இல் 57 பேர் என வெற்றி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள். தேசிய அளவிலான சாதனைகள் இந்தியா திறன் போட்டி 2024 இல் தமிழ்நாடு மாணவர்கள் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம், 17 சிறப்பு பதக்கங் கள் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். உலக திறன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போட்டியாளர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர். அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி சமூக நல இல்லங்கள், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், மீனவர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 15,890 இளை ஞர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 2023 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்று வரு கின்றனர். இந்த திட்டத்திற்கு 2023-24 இல் 8,123.83 கோடி ரூபாயும், 2024-25 இல் 13,721.50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டம் நீண்ட கால பட்டா கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்காக உரு வாக்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் 14,45,109 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ் 86,217 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சுயசான்றிதழ் அடிப்படையில் கட்டட அனுமதி பெறும்  புதிய திட்டத்தின் கீழ் 15,015 மனை பிரிவு களுக்கும் 5,496 கட்டட வரை படங்களுக்கும் அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன. சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்கள் SCOOT திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறி வியல் பயிற்சிகள் வழங்கப்பட்டு 13 மாண வர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். ஜப்பான் நாட்டில் 15 மாணவிகள் பணி நியமனம் பெற்றுள்ளனர். தென் கொரியாவில் 6 மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுள்ளனர். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நீதி ஆகிய ஏழு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் பின்தங்கிய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.